“உன் அப்பன் வீட்ல இருந்து கார் வாங்கிட்டு வா இல்லனா சாவு” தினம் தினம் டார்ச்சர்.. உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர் குடும்பம்… புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் அப்பன் வீட்ல இருந்து கார் வாங்கிட்டு வா இல்லனா சாவு” தினம் தினம் டார்ச்சர்.. உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர் குடும்பம்… புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டம் கோர்வா கிராமத்தைச் சேர்ந்த ஹீனா என்பவரை, கூடுதல் வரதட்சணை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது கணவர் குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பலத்த தீக்காயமடைந்த அவர் ஜோத்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு பகவானாராம் என்பவருடன் திருமணமான ஹீனாவை, அவரது கணவர், மாமியார் லஸ்மோ தேவி, மாமனார் சோனாராம் மற்றும் நாத்தனார் அம்ரிதா தேவி ஆகியோர் தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதை செய்துவந்துள்ளனர். குறிப்பாக, பிறந்தவீட்டிலிருந்து கார் வாங்கி வரச்சொல்லி வற்புறுத்தியதுடன், குழந்தை பாக்கியம் மற்றும் சொத்துத் தகராறு காரணங்களாலும் அவர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த செப்டம்பர் 21 அன்று இரவு, திட்டமிட்டபடி ஹீனா மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துள்ளனர். இக்கொடூரச் செயலை விபத்து அல்லது தற்கொலை போலக் காட்டுவதற்காக, அவரது மொபைல் போனைப் பயன்படுத்திப் பெற்றோருக்குத் தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளனர். 90 சதவீதத்திற்கும் மேல் தீக்காயமடைந்த ஹீனாவை மீட்டு ஜெய்சல்மர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து ஹீனாவின் தந்தை புர்காராம் அளித்த புகாரின் பேரில், குஹ்டி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொடூரக் கொலையில் ஈடுபட்ட கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகிய நான்கு பேரையும் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in