BREAKING: ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்.. மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்.. தமிழகத்தில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

BREAKING: ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்.. மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்.. தமிழகத்தில் பெரும் பரபரப்பு..!!

Published

on

போக்சோ வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரிக்கத் தமிழகக் காவல்துறை அண்மையில் பெண் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதுவரை இந்த விவகாரத்தில் ஜெம் வீரமணிக்கு எதிராகப் புகார் அளித்துள்ள பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, இந்தத் தொழிலதிபராலோ அல்லது இந்த விவகாரத் தொடர்புகளாலோ பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் எவ்வித பயமும் இன்றி துணிச்சலாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் புலனாய்வுக் குழு உறுதியளித்துள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in