“இந்திய கபடி அணியில் விளையாட 10 லட்சம் லஞ்சமா..?” வீராங்கனையின் தாய் பரபரப்பு புகார்.. லீக்கான ரகசிய ஆடியோ.. விளையாட்டுத் துறையில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“இந்திய கபடி அணியில் விளையாட 10 லட்சம் லஞ்சமா..?” வீராங்கனையின் தாய் பரபரப்பு புகார்.. லீக்கான ரகசிய ஆடியோ.. விளையாட்டுத் துறையில் பரபரப்பு..!!

Published

on

இந்திய கபடி அணியில் விளையாட வைப்பதற்காகத் தனது மகளிடம் விளையாட்டுத் துறை முக்கியப் புள்ளிகள் சிலர் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாயார் சரண்யா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த தங்களை ஏமாற்றி, தங்களுக்குத் தெரியாமலேயே கார்த்திகாவுக்குக் கிடைத்த பெரும் தொகையைச் சிலர் பறித்துக் கொண்டுள்ளதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சோலை ராஜா என்பவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும், இதற்காகப் பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு தற்போது ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த லஞ்சப் புகார் தொடர்பாகப் பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ள சரண்யா, அது தொடர்பான ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். தனது மகளைச் சிலர் தவறாக வழிநடத்தி, அவரிடமிருந்த பணத்தைச் சுரண்டிக் கொண்டதாகக் கூறும் அவர், இந்த மோசடி மற்றும் விளையாட்டுத் துறை அரசியல் குறித்துத் தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டுத் தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in