“அவ கேக்குறது எதையும் என்னால பண்ண முடியல..” அளவுக்கு மீறிய டிமாண்ட்… ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற காதலன் செய்த கொடூரம்..! ஹோட்டல் அறையில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவ கேக்குறது எதையும் என்னால பண்ண முடியல..” அளவுக்கு மீறிய டிமாண்ட்… ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற காதலன் செய்த கொடூரம்..! ஹோட்டல் அறையில் நடந்த பயங்கரம்..!!

Published

on

தேசிய தலைநகரையொட்டிய ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பல்லப்கரில் உள்ள சாவ்லா காலனியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலுக்குத் தன் காதலியை வரவழைத்த நபர் ஒருவர், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு, உணவு வாங்கி வருவதாகக் கூறிவிட்டு ஹோட்டலில் இருந்து அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, கொலைக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக அப்பெண்ணின் கோரிக்கைகளும் தேவைகளும் அதிகரித்ததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர், காதலியை ஹோட்டலுக்கு வரவழைத்து கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

Advertisement

குற்றவாளி போலி அடையாளச் சான்றிதழைப் பயன்படுத்தி ஹோட்டலில் அறை முன்பதிவு செய்து, சாக்குப்போக்கு கூறி அப்பெண்ணை அங்கே வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் முதலில் தன் கைகளால் பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் அப்பெண்ணின் சேலையாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி ‘சிவகுமார்’ என்ற அந்த நபரை விரைந்து கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in