CRIME
“உன் அம்மாவோடு என்னை விட்டுட்டுப் போகாதே..” தீபாவளி ஷாப்பிங் போகும்போது சொன்ன ஒரே வார்த்தை… அறைக்குள்ள பூட்டி மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நிகோஹி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட திலோக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம். இவரது மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு நீண்ட நாள் காதலுக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இருப்பினும், குடும்பத் தகராறு காரணமாக ரேஷ்மா தனது தாய்வீட்டிலேயே வசித்து வந்தார்.
சம்பவத்திற்கு முந்தைய நாள் சிவம் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று, ரேஷ்மாவை சமாதான செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ரேஷ்மாவின் சகோதரி பிரீதி கூறுகையில், தன் தங்கை புகுந்த வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை என்றாலும், சிவத்தின் வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டதாகவும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உதவுவதற்காகத் தானும் உடன் சென்றதாகவும் தெரிவித்தார். மறுநாள் தீபாவளி ஷாப்பிங் செய்ய சிவம் ஷாஜகான் நகருக்குக் கிளம்பியபோது, ரேஷ்மாவும் தானும் வருவதாகத் தயாரானார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
விசாரணையின் போது, சிவம் தன் தாயைப் பற்றித் தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்ததாகப் பிரீதி தெரிவித்தார். “நான் இங்கு தனியாக இருந்தால், உங்கள் அம்மா என்னை வாழ விடமாட்டார்” என்று ரேஷ்மா கூறியதால் ஆத்திரமடைந்த சிவம், அவளுடன் சண்டையிட்டு அறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி சிவத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
