CRIME
“அடப்பாவிகளா… வாயில்லா ஜீவனையும் விடமாட்டீங்களா..?” அரசு மருத்துவமனை ஊழியர் செய்த வெறிச்செயல்.. கஞ்சா போதையில் அரங்கேறிய கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் ராம்காட் பகுதியில், பசு மாட்டிற்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கொடுமைப்படுத்திய அரசு மருத்துவமனை ஊழியர் பிரதீப் குமார் ராவத் 45 வயது நபரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், இந்த நபர் பசு மாட்டிற்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கும் கொடூரமான காட்சிகள் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, விரைந்து செயல்பட்ட வாரணாசி போலீசார் குற்றவாளியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதீப் குமார், தான் கஞ்சா போதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது போலீசார் அவர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
