CRIME
“ஐயோ பாவம்.. கனமழையால் சரிந்து விழுந்த கூரை வீடு..” நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு இடையே, ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி கொடூரமான முறையில் உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நீம்காவ்ன் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத்பூர் கிராமத்தில் வசித்து வந்த அந்த ஏழைக் குடும்பத்தினர், இரவு நேரத்தில் தங்களது ஓலை வேய்ந்த கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் கூரை பலவீனமடைந்து நள்ளிரவில் திடீரென சரிந்து விழுந்தது.
கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், விடிய விடிய இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக கூரையின் இடிபாடுகளுக்குள் நசுங்கி அந்த மூவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிராம மக்கள் இடிபாடுகளை முழுமையாக அகற்றி, மூவரின் சடலங்களையும் மீட்டனர். கனமழையால் ஏற்பட்ட இந்த நெஞ்சை உலுக்கும் விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
