LATEST NEWS
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணியிடம் பேரம்..? ரூ.500 கோடி பணம் பறிப்பு… ஸ்டாலின் என்ன செய்தார்..? அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அடுக்கடுக்கான கேள்வி..!!
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணியிடம் பேரம் பேசப்பட்டு, ரூ.500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது தொடர்பாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டே ஜெம் வீரமணி மீது காவல் துறையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் . இந்த விவகாரம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தார்களா இல்லையா என்ற கேள்வியும், பாலியல் வன்கொடுமை ஆதாரங்கள் கிடைத்த பிறகும் ஏன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரூ.500 கோடி வரை பணம் பறிப்பு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
