“அடக்கொடுமையே.. தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்..” 3 வயது குழந்தையை 10 அடி தூரம் இழுத்துச் சென்ற ஸ்கார்பியோ கார்.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கொடுமையே.. தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்..” 3 வயது குழந்தையை 10 அடி தூரம் இழுத்துச் சென்ற ஸ்கார்பியோ கார்.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தின் சான்சோர் நகர இந்திரா காலனியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான சாலை விபத்து அரங்கேறியுள்ளது. பெற்றோர் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, விளையாடிக்கொண்டிருந்த 3 வயது பச்சிளம் குழந்தை ஒன்று திடீரென ஓடிவந்து சாலைக்குச் சென்றுள்ளது. குழந்தையைத் தடுத்து நிறுத்துவதற்காக அதன் தாய் பின்னாடியே ஓடிவந்துள்ளார். ஆனால், அதற்குள் அந்த வழியாக அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், தாயின் கண்ணெதிரேயே அந்தக் குழந்தையின் மீது ஏறி, சுமார் 10 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று கொன்றது. இந்த ஒட்டுமொத்த கொடூரச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்தை ஏற்படுத்திய ஸ்கார்பியோ காரின் ஓட்டுநர், மனிதாபிமானமே இல்லாமல் விபத்து நடந்த பிறகு ஒரு நொடி கூட காரை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து அதிவேகமாகத் தப்பியோடிவிட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஒரு நல்ல மனிதராக இருந்திருந்தால், காரை நிறுத்திவிட்டுப் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஏதேனும் உதவி செய்ய முயன்றிருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களை ஓட்டுநருக்கு எதிராகப் பதிவு செய்து வருகின்றனர். தற்போது சான்சோர் போலீசார் அந்த காரைப் பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in