“கடைசியில் சொன்ன அந்த வார்த்தை” யமுனையில் குதிக்கும் முன் கதறிய தொழிலாளி… இணையத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!! – cinefeeds
Connect with us

CRIME

“கடைசியில் சொன்ன அந்த வார்த்தை” யமுனையில் குதிக்கும் முன் கதறிய தொழிலாளி… இணையத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், 38 வயதான தினேஷ் என்ற தொழிற்சாலை தொழிலாளி யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்பாக அவர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

அந்த வீடியோவில், தனது ‘கடைசி ராம்-ராம்’ (Last Ram-Ram) எனக் கூறிக்கொண்டே தினேஷ் யமுனை நதியில் குதிக்கிறார். கடந்த மூன்று மாதங்களாகத் தனது தொழிற்சாலை முதலாளியின் உறவினரும் (அண்ணன்/தம்பி மகன்) மற்றொரு ஊழியரும் தன்னைத் தொடர்ச்சியாகக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்ததே தனது முடிவுக்குக் காரணம் என அவர் அதில் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன உளைச்சல் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, தற்கொலைக்குத் தூண்டியதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in