இதுக்கெல்லாமா சாகணும்..? வேறு பெண்களுடன் கணவன் ஆடியதால்… வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு… விநாயகர் ஊர்வலத்தில் நடந்த சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதுக்கெல்லாமா சாகணும்..? வேறு பெண்களுடன் கணவன் ஆடியதால்… வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு… விநாயகர் ஊர்வலத்தில் நடந்த சோகம்..!!

Published

on

மஞ்சேரியல் மாவட்டம் காசிபேட் மண்டலத்தில் உள்ள தொட்டிகுடா கிராமத்தில், கணவன் வேறு பெண்களுடன் நடனமாடியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் மனைவி சந்தியா (23) தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோனாபூர் படுகூடாவைச் சேர்ந்த இவருக்கும், ஜங்கு என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன விழாவின் போது, கணவன் ஜங்கு அங்கிருந்த மற்ற பெண்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். தனது கண் முன்னாலேயே கணவன் வேறு பெண்களுடன் நெருக்கமாக நடனமாடுவதைக் கண்ட சந்தியா, இதனால் கடும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளார்.

Advertisement

இந்தத் தீவிர மன வேதனையின் காரணமாக, கடந்த வியாழக்கிழமை சந்தியா தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மஞ்சேரியல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in