“உன்னை கூலிப்படை வச்சு தூக்கிடுவேன்..” படிக்க வச்ச புருஷனை மிரட்டிய ஹோம் கார்டு மனைவி.. SSP அலுவலகத்தில் கதறி அழுத கூலித் தொழிலாளி.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன்னை கூலிப்படை வச்சு தூக்கிடுவேன்..” படிக்க வச்ச புருஷனை மிரட்டிய ஹோம் கார்டு மனைவி.. SSP அலுவலகத்தில் கதறி அழுத கூலித் தொழிலாளி.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றும் 30 வயது நபர் ஒருவர், தனது 24 வயது மனைவியைப் படிக்க வைத்து ஹோம் கார்டு வேலை வாங்கித் தந்த நிலையில், தற்போது அந்த மனைவியே தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜகுநாத் ரெட்டியிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். “மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் மகனின் எதிர்காலமும் கல்வியும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன்; ஆனால், இப்போது அவர் பணிபுரியும் காவல் நிலையப் பகுதிக்கு நான் வந்தால் என்னைக் கூலிப்படை வைத்துப் படுகொலை செய்துவிட்டு, தனது கள்ளக்காதலனைத் திருமணம் செய்து கொள்வதாக மிரட்டுகிறார்” என்று கணவர் குற்றம் சாட்டியுள்ளார். இப்புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அதன் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் நகர எஸ்.பி அசோக் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஆனால் கணவனின் இந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்த ஹோம் கார்டு மனைவி முற்றிலும் மறுத்துள்ளார். “இது கணவன்-மனைவி இடையேயான தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை; என் கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை” என்று அவர் தெரிவித்துள்ளார். படிக்க வைத்து வேலை வாங்கித் தந்த கணவனை மனைவியே மிரட்டுவதாக எழுந்த இந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in