CRIME
“அடச்சீ.. நீயெல்லாம் ஆசிரியரா..? பிட் அடித்ததுக்காக இவ்வளவு கொடூரமான தண்டனையா..?” 13 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி க்ஷமா தீக்ஷித் என்பவர் ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேர்வில் பிட் அடித்துத் தேர்வு எழுதினார் எனக் குற்றம் சாட்டி, அந்தப் பள்ளியின் ஆசிரியர் அந்தச் சிறுமியை மிகக் கொடூரமான முறையில் அடித்துத் துவம்சம் செய்துள்ளார். இந்த அசுரத் தாக்குதலின் போது ஆசிரியர் சிறுமியின் கைகளைப் பிடித்து ஆக்ரோஷமாக முறுக்கியதில், மாணவி க்ஷமாவின் இரண்டு கைகளும் அடியோடு முறிந்துள்ளன. இக்கோரச் சம்பவம் குறித்துக் கேட்கச் சென்ற மாணவியின் ஏழைத் தந்தை உமேஷ் தீக்ஷித்தையும் அந்தப் பள்ளி ஆசிரியர் அடித்து மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதலுதவி சிகிச்சைக்குப் பின் மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரது தந்தை பதற்றத்துடன் ஃபரூக்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளார். அங்கு தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி க்ஷமா சிகிச்சை பலனின்றி துடிதுடித்து மரணமடைந்தார். இக்கொடூரக் கொலை விபரீதம் குறித்துத் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அச்சே சிங் யாதவ் மற்றும் வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் ஆகிய இருவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
