பிரேக்அப்பால் வந்த வினை… சைக்கோவாக மாறிய காதலன்…! ஆசிரியை நிஷாத் பாத்திமா கொலையில் வெளியான அடுத்தடுத்த திருப்பங்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

பிரேக்அப்பால் வந்த வினை… சைக்கோவாக மாறிய காதலன்…! ஆசிரியை நிஷாத் பாத்திமா கொலையில் வெளியான அடுத்தடுத்த திருப்பங்கள்..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் லக்கீம்பூர் கேரி பகுதியில் உள்ள ‘சில்ட்ரன் அகாடமி’ பள்ளியில் ஆசிரியை நிஷாத் பாத்திமா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தற்போது ‘பிரேக்அப்’ கோணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுல்தான்பூரிலிருந்து லக்கீம்பூர் வந்த நிஷாத்தின் குடும்பத்தினர், குற்றவாளி சவூத் அன்சாரியின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். ஒரே பள்ளியில் படித்த இவ்விருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய பழக்கம் இருந்து வந்த நிலையில், சமீபகாலமாக நிஷாத், சவூதிடம் பேசுவதைத் தவிர்த்து முற்றிலும் விலகி இருந்துள்ளார்.

நிஷாத் தன்னுடனான தொடர்பைக் குறைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த சவூத், அவரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தவறான வழியில் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், சவூதின் தொந்தரவால் நிஷாத் அவருடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டு விலகியுள்ளார். இதனால் ஏற்பட்ட கோபமும் ஏமாற்றமும் சவூதின் சமூக வலைதளப் பதிவுகளிலும் வெளிப்பட்டுள்ளது. அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் நிலைகுலைந்த சவூத், தீவிர விரக்தி அடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த ஆத்திரத்தின் உச்சகட்டமாக, திங்கள்கிழமை பள்ளி வளாகத்திற்குள் புகுந்த சவூத், நிஷாத்தைப் படிக்கட்டுகளில் இழுத்துச் சென்று முதல் தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து ஆசிரியை நிஷாத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சவூத், உடனடியாகத் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த திடுக்கிடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சி பதிவுகள், மொபைல் போன் அழைப்பு விவரங்கள் (CDR) மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in