“நான் கர்ப்பமா இருக்கேன்…” பிரசவ வார்டில் வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணி நாடகம் ஆடிய பெண்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் கர்ப்பமா இருக்கேன்…” பிரசவ வார்டில் வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணி நாடகம் ஆடிய பெண்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Published

on

தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ வார்டில், கடந்த 20-ம் தேதி இரவு சந்தேகத்திற்குரிய வகையில் உலா வந்த பெண் ஒருவரை நோயாளிகளின் உறவினர்கள் பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது அவர் தனது வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணிப் பெண் போல நாடகமாடிய அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தையைத் திருடவே அவர் அங்கு வந்துள்ளார் எனச் சந்தேகித்த உறவினர்கள், அப்பெண்ணையும் அவருடன் வந்த இருவரையும் பிடித்து மருத்துவமனைப் பாதுகாப்பாளர்களிடம் ஒப்படைத்ததோடு, போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட பெண் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆர்த்தி என்பது தெரியவந்தது. இவருக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறு வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணி போல நாடகமாடியதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், மருத்துவமனைக்கு அவர் வந்ததன் உண்மையான பின்னணி என்ன, குழந்தையைக் கடத்தும் நோக்கம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in