தமிழகமே ஷாக்..! இன்னும் 2 மாதத்தில் EPS முதல்வர்… கொளத்தூருக்கு இடைத்தேர்தல் வரும்… மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழகமே ஷாக்..! இன்னும் 2 மாதத்தில் EPS முதல்வர்… கொளத்தூருக்கு இடைத்தேர்தல் வரும்… மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பேச்சு..!!

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்னும் இரண்டரை மாதங்களில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதால் கட்சியினர் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, திடீர் சுவாசக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படும் தற்போதைய சூழலில், மாஃபா பாண்டியராஜன் கொளத்தூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் எனப் பேசியிருப்பது தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in