LATEST NEWS
“பேசாம அந்த ஜோசியரையே CM ஆக்கியிருக்கலாம்” விஜய்க்கு ஜெயில்ல கண்டம்… கருப்பு கோட், கருப்பு பொட்டு ரகசியம்.. சீமான் வெளியிட்ட அதிரடித் தகவல்.!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது கட்சியினரை ஜோசியர் பேச்சைக் கேட்பதாகக் கூறி கடுமையாக சாடியுள்ளார். அரசியல் ரீதியான முடிவுகளுக்கு ஜோதிடர்களின் ஆலோசனைகளை நாடுவது மக்கள் மத்தியில் தவறான பார்வையை ஏற்படுத்தும் என்று அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு “ஜெயில் கண்டம்” இருப்பதாக ஜோசியர் ஒருவர் கூறியதாகவும், அதிலிருந்து தப்பிக்க சிறைக்குச் சென்று கையை நனைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருஷ்டி அதிகமாக இருப்பதால் கருப்பு நிற கோட் மற்றும் கருப்பு பொட்டு வைத்துக் கொள்ளுமாறும் அந்த ஜோசியர் முதல்வர் தரப்பிற்கு ஆலோசனைகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற ஜோதிடக் கருத்துகளைக் கேட்டு அதன்படி ஆட்சி நடத்துவதற்குப் பதிலாக, பேசாமல் அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கிவிட்டு போயிருக்கலாம் என்று சீமான் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். பகுத்தறிவு மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டிய தலைவர்கள், இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
