இத்தனை சிறுமிகளா…? பங்களாவில் நடந்த பகீர் அட்டூழியம்… அம்பலமான ஜெம் வீரமணியின் நெட்வொர்க்…!! – cinefeeds
Connect with us

CRIME

இத்தனை சிறுமிகளா…? பங்களாவில் நடந்த பகீர் அட்டூழியம்… அம்பலமான ஜெம் வீரமணியின் நெட்வொர்க்…!!

Published

on

பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படும் வீடியோ அடங்கிய ஆதாரம் தன்னார்வ தொண்டு நிறுவனம் கொடுத்ததை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார்கடந்த 2025 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆரம்பகட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிப்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் மறுவிசாரணை நடத்தியதில், சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரது வாக்குமூலம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான வீரமணி, மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உதவியாளர் சாந்தி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த (ஆக 29) ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது போலீஸ் காவலில் உள்ள வீரமணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

போலீசாரின் விசாரணையில், போயஸ் கார்டன் பகுதியில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா ஒன்றை எடுத்து, அங்கு தனது தொழில் கூட்டாளிகளுக்காக சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தனது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சாந்தி மகேந்திரசிம்மன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் மூலமாக சிறுமிகளை அழைத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in