“தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்…” குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு..! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்…” குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு..! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Published

on

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் அன்றைய தினமே தொடங்கியதுடன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி கல்வித்தகுதி கொண்டவர்களுடன் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை குரூப்-4 தேர்வு எழுத 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இதற்கு முன்பு விண்ணப்பிக்கக் கடைசி நாளாக நவம்பர் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு 5 ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ள காரணத்தினாலும், தேர்வர்கள் வசதியைக் கருத்தில் கொண்டும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

இதன்படி, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக வரும் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப்-4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in