அடேங்கப்பா..! இனி 108-க்கு கூப்பிட்டு அட்ரஸ் சொல்ல வேண்டாம்… லொகேஷன் தானாவே டிரேஸ் ஆகும்..! ஆபத்தான நேரத்தில் உயிரைக் காக்க தமிழக அரசு கொண்டு வந்த புதிய டெக்னாலஜி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! இனி 108-க்கு கூப்பிட்டு அட்ரஸ் சொல்ல வேண்டாம்… லொகேஷன் தானாவே டிரேஸ் ஆகும்..! ஆபத்தான நேரத்தில் உயிரைக் காக்க தமிழக அரசு கொண்டு வந்த புதிய டெக்னாலஜி..!!

Published

on

மாரடைப்பு மற்றும் கடுமையான விபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு விரைவாக வந்து சேரும் ஆம்புலன்ஸ்களே உயிரைக் காப்பாற்ற மிகவும் முக்கியம் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அவசர அழைப்பின் போது அழைப்பவரின் இருப்பிடத்தை தானாக கண்டறிந்து, ஆம்புலன்ஸ் சேவையை வேகமாக வழங்க உதவும். இதன் மூலம் பதிலளிக்கும் நேரம் 3 நிமிடங்கள் வரை குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அவசர காலத்தில் நொடிகளும் விலைமதிப்புள்ளவை. உயிரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்குள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. குறிப்பாக, வழி தெரியாத கிராமப்புறங்கள் அல்லது அடையாளம் தெரியாத நெரிசல் மிகுந்த நகரப் பகுதிகளில் முகவரியை சொல்லியே சில நிமிடங்கள் வீணாகிவிடும்.

Advertisement

இந்த துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அவசர கால சேவையை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிய புரட்சிகரமான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in