“டாஸ்மாக் கலெக்ஷன் சாதனை இல்லை… வெட்கக்கேடு…” அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..! தமிழக அரசியலில் கிளம்பிய புதுப் புயல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டாஸ்மாக் கலெக்ஷன் சாதனை இல்லை… வெட்கக்கேடு…” அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..! தமிழக அரசியலில் கிளம்பிய புதுப் புயல்..!!

Published

on

டாஸ்மாக் மது விற்பனை அதிகரிப்பது சாதனையல்ல, வெட்கப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், டாஸ்மாக் மூலம் மது விற்பனை அதிகரிப்பதை சாதனையாக கருத முடியாது என்றும், இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது என்று பெருமையாக கூறுவதால் பொதுமக்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்திய நிலையில், இதுவரை 54 சதவீத பாட்டில்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதில் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்கள் விரைவில் சரி செய்யப்படும் என்றும், முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Advertisement

தற்போது தமிழகத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார். போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர்களுக்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 204 சட்டமன்ற தொகுதிகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பதையே தங்களது முக்கிய இலக்கு என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் போதையில் இருந்து மீண்டவர்களுக்கு முறையான ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in