ஐயோ கடவுளே.. காரை நசுக்கிய ராட்சத கன்டெய்னர்.. நொடிப் பொழுதில் பிரபல வழக்கறிஞர் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்.. ஆனா அங்கே நடந்த அந்த அதிசயம்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. காரை நசுக்கிய ராட்சத கன்டெய்னர்.. நொடிப் பொழுதில் பிரபல வழக்கறிஞர் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்.. ஆனா அங்கே நடந்த அந்த அதிசயம்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் விசேஷ் கபூர், அவரது தாயார், மனைவி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய நால்வர் டெஹ்ராதூனில் நடந்த ஒரு கொடூர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். புதன்கிழமை மாலை வழக்கறிஞர் விசேஷ் கபூர் தனது குடும்பத்தினருடன் காரில் டெஹ்ராதூன் நோக்கிப் புறப்பட்டுள்ளார். அவர்களின் கார் டெஹ்ராதூனின் மொஹப்பவாலா பகுதியை அடைந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெரிய கன்டெய்னர், அப்படியே காரின் மீது கவிழ்ந்து நசுக்கியது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிரேன் உதவியுடன் காரின் மேல் கிடந்த கன்டெய்னரை அகற்றினர். காரின் உள்ளே இருந்தவர்களைப் போலீசார் வெளியில் இருந்து கூப்பிட்டுப் பார்த்தபோது எந்தவொரு அசைவும் இல்லாததால், காரில் இருந்த ஐந்து பேருமே இறந்துவிட்டதாகப் போலீசார் முதலில் நினைத்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்களின் 6 வயது மகன் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலியான இந்தச் சம்பவம் சஹாரன்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in