“என்ன கொடுமை இது..” நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் பேசிய மனைவி.. கண்டித்த கணவன் தூக்கில் தொங்கிய கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்ன கொடுமை இது..” நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் பேசிய மனைவி.. கண்டித்த கணவன் தூக்கில் தொங்கிய கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாந்த் (29) என்பவர், தனது மனைவி யுவராணி வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் ஏற்பட்ட தகராறில், சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். திருமணமகி 6 ஆண்டுகள் ஆகும் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, யுவராணி சாணி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை வெங்கடேஷ் பிரசாந்த் தடுத்துக் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு யுவராணியும் அவரது மகளும் தூங்கிய நேரத்தில், வெங்கடேஷ் பிரசாந்த் மற்றொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

வெங்கடேஷ் பிரசாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அந்தியூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், யுவராணி பருவாச்சி பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் என்ற இளைஞருடன் தொலைபேசியில் பேசி வந்ததை வெங்கடேஷ் கண்டித்ததே இந்த தகராறுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. வெங்கடேஷ் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சோதனைகளின் அடிப்படையிலேயே முழுமையாகத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in