LATEST NEWS
என்ன ஒரு கொடுமை.. 100 நாள் வேலைக்குப் போனவங்களுக்கு இப்படியொரு நிலைமையா..? திடீரெனத் திருப்பப்பட்ட காரால் நிகழ்ந்த பயங்கரம்… ஈரோட்டில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 17 பேர் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் (100 நாள் வேலைத் திட்டம்) பணியாளர்கள், பணிக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக திடீரெனத் திருப்பப்பட்டுள்ளது.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த பணியாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பணியாளர்கள் 17 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபிச்செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோபிச்செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
