மலைப்பாதையில் பயங்கரம்.. குரூப்-2 தேர்வு எழுதப் போன வனக்காப்பாளர்.. அடுத்த சில மணிநேரத்தில் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் விபத்து..!! – cinefeeds
Connect with us

CRIME

மலைப்பாதையில் பயங்கரம்.. குரூப்-2 தேர்வு எழுதப் போன வனக்காப்பாளர்.. அடுத்த சில மணிநேரத்தில் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் விபத்து..!!

Published

on

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் இன்று காலை நேரிட்ட அதிர்ச்சியூட்டும் சாலை விபத்தில், தட்டக்கரை வனச்சரகத்தில் வனக்காப்பாளராகப் பணியாற்றி வந்த நவீன் (27) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அய்யம்பாளையம் குன்னிக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த இவர், இன்று காலை 7 மணியளவில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதுவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் பர்கூரில் இருந்து அந்தியூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தாமரைக்கரை – அந்தியூர் சாலையில் உள்ள நெய்க்கரை வளைவு அருகே சென்றபோது, எதிரே அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி வந்த பிக்கப் வேன் ஒன்று நவீனின் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பலமாக மோதியது.

இந்தக் கொடூரமான மோதலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த வேனின் பின் சக்கரம் அவரது நெஞ்சின் மீது ஏறி இறங்கியதால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய வேன் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேர்வு எழுதச் சென்ற அரசு ஊழியர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in