“ஆசை வார்த்தை கூறி கடைக்கு அழைத்து சென்ற கொடூரன்..” 11 வயது சிறுமியின் கைகால்களைக் கட்டிப்போட்டு 56 வயது நபர் செய்த வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஆசை வார்த்தை கூறி கடைக்கு அழைத்து சென்ற கொடூரன்..” 11 வயது சிறுமியின் கைகால்களைக் கட்டிப்போட்டு 56 வயது நபர் செய்த வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

டெல்லி சதர் பஜார் பகுதியில் 11 வயது பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 56 வயதான மக்சூத் என்பவரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இரவு, எழுதுவதற்குப் பேனா வாங்கத் தனியாக வந்த ஆறாம் வகுப்பு சிறுமியை ஆசை வார்த்தை கூறி தையல் கடைக்கு அழைத்துச் சென்று, கைகால்களைக் கட்டிப்போட்டு அவர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்குத் திரும்பிய சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுததைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வடக்கு மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் மற்றும் சட்டவிரோத சிறை வைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி அன்றே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in