“சாதி வேற, உன்னை கட்டிக்க முடியாது..!” அரசு வேலை கிடைத்ததும் 10 வருட காதலை முறித்த காதலன்.. அடுத்த நொடியே காதலி எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சாதி வேற, உன்னை கட்டிக்க முடியாது..!” அரசு வேலை கிடைத்ததும் 10 வருட காதலை முறித்த காதலன்.. அடுத்த நொடியே காதலி எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், 10 ஆண்டுகால காதலை அரசு வேலை கிடைத்தவுடன் உதறித்தள்ளிய காதலனின் துரோகத்தால், மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஞ்சுளா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கடந்த பத்து வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து, திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தனர். மஞ்சுளா பி.எட் படித்துவிட்டு அரசுத் தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. வேலை கிடைத்த அடுத்த கணமே கிருஷ்ணமூர்த்தியின் குணமும் மாறத் தொடங்கியுள்ளது; திருமணப் பேச்சை எடுத்தாலே எரிச்சலடைந்த அவர், “நாமிருவரும் வெவ்வேறு சாதி, அதனால் திருமணம் செய்ய முடியாது” எனக் கூறி 10 ஆண்டுகால காதலை ஒரே வார்த்தையில் மறுத்துள்ளார்.

காதலனின் இந்தத் திடீர் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத மஞ்சுளா, மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர் நிலைகுலைந்து போய், தங்களது மகளின் மரணத்திற்குக் காரணமான கிருஷ்ணமூர்த்திக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிகேட்டு அழுது போராடி வருகின்றனர். அரசு வேலை கிடைத்தவுடன் சாதியைக் காரணம் காட்டி ஏமாற்றும் ஆண்களின் இந்த சுயநலப் போக்கு, காதலின் மீதான நம்பிக்கையையே சிதைப்பதாக நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in