LATEST NEWS
“காப்பாத்துங்க..” நள்ளிரவில் வெடித்துச் சிதறிய ஏசி.. பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அலறியடித்து ஓடிய பெற்றோர்கள்.. அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்..!!
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஏசி வெடிவிபத்தில், ஐந்து நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவில் மருத்துவமனையின் தீவிர பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த ஏசி இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் வார்டு முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததை அடுத்து, அங்கிருந்த பெற்றோர்கள் அலறியடித்தபடி தங்களது குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வார்டை விட்டு வெளியே ஓடினர்.
இந்தக் கோர விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 நாட்களேயான ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், அங்கிருந்த மேலும் 24 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களில் மூன்று குழந்தைகளின் நிலைமை மிகவும் சீரியஸாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த உடனே உஷாரான மருத்துவமனை ஊழியர்கள் மின் இணைப்பைத் துண்டித்து, குழந்தைகளை அடுத்த வார்டுகளுக்கு மாற்றினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ராஜர்ஷி ஷா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஜோகு ராமண்ணா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
