LATEST NEWS
“அம்மா வந்துட்டேன்..!” ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற குட்டி யானை.. தாய் யானை செய்த நெகிழ்ச்சியான காரியம்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!
ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கஜோல்டோபா பகுதி அருகே, வெறும் 3 நாட்களேயான குட்டி யானை ஒன்று டீஸ்டா ஆற்றின் அதிவேக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அந்தக் குட்டி யானை, பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டது. தனது கண் முன்னே குட்டி அடித்துச் செல்லப்பட்டதால் நிலைகுலைந்து போன தாய் யானை, ஆற்றங்கரையிலேயே நின்று கொண்டு தனது குட்டியைத் தேடி ஆவலோடும் பதற்றத்தோடும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து வைகுந்தபூர் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தவுடன், அவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். உள்ளூர் மீனவர்களின் துணிச்சலான உதவியுடன், ஆற்றின் அலைகளுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருந்த அந்தக் குட்டி யானை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பின்னர், மருத்துவர்கள் அதற்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை வழங்கினர். வனத்துறையினர் அந்தக் குட்டியை மீண்டும் அதன் தாயிடம் கொண்டு சேர்த்தபோது, அந்தத் தாய் யானையின் பாசப் போராட்டம் பார்ப்பவர்களை நெகிழச் செய்தது. தன் குட்டியைப் பார்த்த உடனே ஓடிவந்து தடவிக் கொடுத்து, பாசத்துடன் அரவணைத்து, அதற்குப் பால் புகட்டத் தொடங்கியது.
