CRIME
“போதையில் நண்பர்களே எதிரிகளாக மாறிய கொடூரம்..” ரத்த வெள்ளத்தில் சரிந்த 34 வயது வாலிபர்.. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி!
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறி வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. அரியலூர், ஆம்பூர், கரூர், நெல்லை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து முடிந்த அதிர்ச்சி விலகும் முன்பே, சென்னை தண்டையார்பேட்டையிலும் ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 34 வயதான சரவணன் என்பவர், நேற்று அவரது நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவலின்படி, சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் மற்றும் தகராறில், ஆத்திரமடைந்த நண்பர்கள் மதுபாட்டிலை உடைத்து சரவணனின் கழுத்தில் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளன.
