LATEST NEWS
“அதிமுகவும் தவெகவும் ஒன்று தானே…” அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நக்கல் பேச்சு.. சட்டமன்றத்தில் வெடித்த பயங்கர சிரிப்பலை..!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “அதிமுகவும் தவெகவும் ஒன்று தான்” கிண்டலாகப் பதிலளித்த சம்பவம் அவையில் பெரும் சிரிப்பலையையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குத் திராவிடர் மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருவள்ளூர் எங்க மாவட்டம் என்றும், 10-க்கு 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்ற மாவட்டம் என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்தப் பேச்சின் போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் உடனடியாகக் குறுக்கிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி தொகுதியில் அதிமுக தான் வெற்றி பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டினர். எதிர்க்கட்சியினரின் இந்த உடனடித் திருத்தத்திற்குப் சற்றும் சளைக்காமல் சுடச்சுடப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அதிமுகவும் தவெகவும் ஒன்று தானே” என மிகவும் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் பேரவையில் பதிலளித்தார். சட்டமன்றத்தில் தவெக அமைச்சர் மற்றும் அதிமுகவினர் இடையே அரங்கேறிய இந்த சுவாரசியமான அரசியல் நகைச்சுவை விவாதம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
