LATEST NEWS
“ஐயோ.. நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கே..! 19 வருஷமா புருஷனும் இல்லை… பிள்ளைகளுக்கும் கண்ணு தெரியல… பார்வையற்ற பிள்ளைகளை நினைச்சு இன்னமும் ஓய்வில்லாம ஓடிக்கிட்டே இருக்குற 70 வயது தாயின் கண்ணீர்க் கதை..!!!”
70 வயதான கருணா கோஷ் என்பவரைப் பற்றிய நெகிழ்ச்சியான வீடியோவைContent Creator ஆராதனா சாட்டர்ஜி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கொல்கத்தாவின் குறுகிய தெருவில் புன்னகையுடன் காணப்படும் கருணாவின் முகத்தைப் பார்த்து, அவர் பின்னணியில் இருக்கும் பெரும் போராட்டத்தை யாராலும் எளிதில் கணித்துவிட முடியாது. பெரும்பாலான மக்கள் ஓய்வு பெற விரும்பும் 70 வயதிலும், கருணாவிற்குத் தன் குழந்தைகளின் சிரிப்பே மிகப்பெரிய நிம்மதியாக இருக்கிறது. அதற்காகவே அவர் இரவும் பகலும் பிறர் வீடுகளில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
கருணாவிற்கு 50 வயதில் ஒரு மகளும், 40 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் பிறந்ததிலிருந்தே பார்வையற்றவர்கள். 19 ஆண்டுகளுக்கு முன்பு கருணாவின் கணவர் புற்றுநோயால் காலமானார். கணவரின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தின் முழுப் பொறுப்பும் கருணாவின் தோள்களிலேயே விழுந்தது. போதிய பணவசதி இல்லாத காரணத்தால், பார்வையற்ற அவரது பிள்ளைகளுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகளையோ அல்லது சொந்தமாக இயங்கும் வாய்ப்புகளையோ வழங்க முடியாமல் போய்விட்டது. இதனால் பிள்ளைகள் இருவரும் இப்போதும் முழுமையாகத் தாயையே நம்பி வாழும் சூழ்நிலை உள்ளது.
https://www.instagram.com/reel/DclR4ReTVNC/?utm_source=ig_web_button_share_sheet
தற்போது கருணா மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே அவர்களின் அன்றாட வாழ்க்கை இயங்குகிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் கருணாவின் மன தைரியத்தைப் பாராட்டி, அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். சிலர் UPI மூலம் நிதி உதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அரசு உதவியும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளையில், “கருணாவிற்குப் பிறகு இந்த பிள்ளைகளின் நிலை என்னவாகும்?” என்ற வேதனையான கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
