LATEST NEWS
“நான்தான் ரூட் காட்டுவேன்.. ” பின்னால் வந்த காரை மிரட்டிய சிறுவன்.. லேடி டிரைவர் செய்த கியூட் காரியம்.. இணையத்தை கலக்கும் குட்டி டிராபிக் போலீஸ் வீடியோ..!1
சாலையில் தனக்கு பின்னால் வரும் கார், தனது சைகைகள் மற்றும் முக்கியமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நகர முடியாது என்று அந்தச் சிறுவன் தீவிரமாக நம்பியுள்ளான். அவனது இந்த மழலைத்தனமான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் கண்ட அந்த பெண் ஓட்டுநர், அவனது மனதைக் காயப்படுத்த விரும்பாமல், சிறுவனின் கட்டளைகளுக்கு ஏற்ப காரை இயக்கி அவனுக்கு ஒத்துழைப்பு தந்துள்ளார். சிறுவன் காட்டிய சைகைகளைப் பின்பற்றி, அவர் தனது காரை பாதுகாப்பாகச் செலுத்திய கனிவான நிகழ்வு காண்போரின் நெஞ்ச நெகிழச் செய்துள்ளது.
குழந்தைகளின் கற்பனை உலகத்திற்கு மதிப்பு கொடுத்து, அவனது சைகைகளுக்கு ஏற்ப வேடிக்கையாக காரை ஓட்டிய அந்த பெண் ஓட்டுநரின் செயல் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஓட்டுநருக்குத் தகுந்த வழிகாட்டிவிட்டோம் என்ற பெருமிதத்துடன் அந்தச் சிறுவன் காட்டிய சிக்னல்களும், அதற்குப் பின்னால் இருந்த அவனது மழலைத்தனமான மகிழ்ச்சியும் இந்த வீடியோவை பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
