அடக் கடவுளே… தாயின் கருப்பையிலேயே தொற்றிய கொரோனா… மரணத்தின் எல்லை வரை சென்று மீண்ட பிஞ்சு உயிர்..! 5 நாட்களாக மருத்துவர்கள் நடத்திய தீவிர போராட்டம்… நெகிழ வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக் கடவுளே… தாயின் கருப்பையிலேயே தொற்றிய கொரோனா… மரணத்தின் எல்லை வரை சென்று மீண்ட பிஞ்சு உயிர்..! 5 நாட்களாக மருத்துவர்கள் நடத்திய தீவிர போராட்டம்… நெகிழ வைக்கும் பின்னணி..!!

Published

on

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து கொரோனா தொற்றுடன் பிறந்த அந்த பெண் குழந்தை, சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டது.

இதற்கிடையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் குழந்தைக்கு செப்சிஸ் நோய் இருப்பதையும் கண்டறிந்தனர். செப்சிஸ் நோய் காரணமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறலும் அதிகப்படியான இதயத் துடிப்பும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவர்கள் முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர். குழந்தையின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரலுக்குள் காற்றை செலுத்தினர். இதையடுத்து பிறந்த குழந்தைக்கு புரோ-பி.என்.பி மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். இதன்மூலம் கொரோனா மற்றும் செப்சிஸ் நோய் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

Advertisement

அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாகி காணப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனை முடிவை பெற ஐந்து நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை தொடர்ந்து அளித்தனர். எம்.ஐ.எஸ்-என் நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ள நிலையில், வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக ஆண்டிபாடிகளாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்த புரதத்தை குழந்தைக்கு செலுத்த முடிவு செய்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ஐந்து நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் பூரண குணமடையும் வரையில் மருத்துவர்கள் அந்த பச்சிளம் குழந்தையை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in