“சாக்குப்பைக்குள் இருந்து கேட்ட அழுகுரல்..!” திறந்து பார்த்த மக்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!! – cinefeeds
Connect with us

CRIME

“சாக்குப்பைக்குள் இருந்து கேட்ட அழுகுரல்..!” திறந்து பார்த்த மக்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

Published

on

விசாகப்பட்டினம் மட்டிலபாலம் அருகே உள்ள பித்தாபுரம் காலனியில், சாக்குப்பை ஒன்றின் அருகே பச்சிளங்குழந்தை வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்பதை உணர்ந்த உள்ளூர்வாசிகள், உடனடியாக அங்கு சென்று சாக்குப்பையைத் திறந்து பார்த்தபோது உள்ளே பச்சிளங்குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தையைப் பத்திரமாக வெளியே எடுத்துக் காப்பாற்றினர்.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக அக்குழந்தையை கே.ஜி.எச் (KGH) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அக்குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள எம்.வி.பி காவல்துறையினர், பச்சிளங்குழந்தையைக் கைவிட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்டவர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in