அலறிய பயணிகள்..! விமான கழிவறை கண்ணாடியில் லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்ட கடத்தல் மிரட்டல்… மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அலறிய பயணிகள்..! விமான கழிவறை கண்ணாடியில் லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்ட கடத்தல் மிரட்டல்… மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்டிருந்த கடத்தல் மிரட்டல் குறிப்பு விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு கழிவறையின் கண்ணாடியில் இந்த வாசகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் உடனடியாக விமானியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, அந்த விமானம் அவசரமாகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Advertisement

விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் விமானப் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in