“பட்டப்பகலில் அசாத்திய துணிச்சல்..” திறந்திருந்த கதவு… மாடியில் இருந்த குடும்பம்… பீரோவை காலி செய்த மர்ம நபர்.. சிசிடிவியில் சிக்கிய மிரட்டல் காட்சி..!1 – cinefeeds
Connect with us

CRIME

“பட்டப்பகலில் அசாத்திய துணிச்சல்..” திறந்திருந்த கதவு… மாடியில் இருந்த குடும்பம்… பீரோவை காலி செய்த மர்ம நபர்.. சிசிடிவியில் சிக்கிய மிரட்டல் காட்சி..!1

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற அசி காட் பகுதிக்கு அருகே, பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிய வேளையில் வீட்டின் கதவு திறந்து கிடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடன் ஒருவன், சத்தமில்லாமல் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அந்தச் சமயத்தில் வீட்டின் உரிமையாளர்கள் அனைவரும் மாடியில் உள்ள அறையில் இருந்ததால், கீழே திருடன் நுழைந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.

வீட்டிற்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளான். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் முழுவதும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. பட்டப்பகலில், அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அசி காட் பகுதியில் நடந்துள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீசாருக்குப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனைக் பிடிக்க வாரணாசி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in