அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆபரேஷன்… டாக்டர்கள் சொன்ன 20 நாள் ரெஸ்ட்.. ஆனால் 4 நாளில்..லண்டன் பயணத்தின் பின்னணியை உடைத்த கனிமொழி MLA..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆபரேஷன்… டாக்டர்கள் சொன்ன 20 நாள் ரெஸ்ட்.. ஆனால் 4 நாளில்..லண்டன் பயணத்தின் பின்னணியை உடைத்த கனிமொழி MLA..!!

Published

on

தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தையல் எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பின், மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி விரைவாகப் பணிக்குத் திரும்பிய அர்ப்பணிப்பைக் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின்போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் உடன் செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் கனிமொழி இத்தகவலைப் பகிர்ந்துள்ளார் .

தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமைச்சர் கீர்த்தனாவை குறைந்தபட்சம் 20 நாள்கள் கட்டாய ஓய்வில் இருக்குமாறு காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர் . ஆனால், மாநில நலன் சார்ந்த பணிகள் தேங்கிவிடக் கூடாது என்பதற்காக அவர் 4 நாள்களிலேயே பணிக்குத் திரும்பியுள்ளார் . மேலும், அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது கூட, முதலமைச்சர் விஜய்யின் லண்டன் தொழில் முதலீட்டுப் பயணத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டுப் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தி வந்ததாக கனிமொழி எம்.எல்.ஏ நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in