LATEST NEWS
“கீர்த்தனா பொய்யா பேசுறாங்க.. பொறுப்பு என்னன்னே தெரியல..” வெக அமைச்சரை கிழித்துத் தொங்கவிட்ட மேயர் பிரியா..!!
வாயை திறந்தால் பொய்யை மட்டுமே அமைச்சர் கீர்த்தனா பேசுவதாக மேயர் பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டப்பேரவையில் தவறான தகவல்களையும் பொய்களையும் பேசிவிட்டு, பிறகு அவை குறிப்பில் ஏறாதவாறு “அதை நீக்கிவிடுங்கள்” என அமைச்சர் கீர்த்தனா கூறுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தங்களுடைய அதிகாரமும் பொறுப்பும் என்னவென்றே தெரியாமல் வெறும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் சாடினார்.
தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, தற்போது தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை தவெக அரசு துன்புறுத்தி வருவதாகத் தெரிவித்தார். அமைச்சர்கள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்படாமல் விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறி, தவெக அரசின் செயல்பாடுகளை அவர் கடுமையாகச் சாடினார்.
