LATEST NEWS
கழுத்தில் அணிந்திருந்தது தங்கக் காசு மாலையா..? ஆனால் ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க… 10 சவரன் தங்கக் காசு மாலை சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்..!!
அமைச்சர் கீர்த்தனா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அவர் 10 சவரன் மதிப்பிலான தங்கக் காசு மாலையை அணிந்திருந்ததாகக் கூறி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டிருந்த நகையின் அளவோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். தான் அணிந்திருந்தது உண்மையான தங்கம் அல்ல என்றும், அது ஒரு சாதாரண ஃபேஷன் (covering) நகை என்றும் புகைப்பட ஆதாரத்துடன் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தான் ஒரு சாதாரணப் பெண் என்பதால் தனது ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் நகையின் தரத்தைக் கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள் என்று அவர் தனது பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். “தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லை; என் தங்கத்தைச் சோதிக்கலாம், ஆனால் என் துணிச்சலைச் சோதிக்க முடியாது” என்றும், தன் பின்னால் முதலமைச்சர் விஜய் அண்ணாவின் ஆதரவும் மக்கள் நம்பிக்கையும் இருப்பதாக அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
