LATEST NEWS
அமைச்சர் கீர்த்தனா பதவிக்கு சிக்கல்..? 3 முறை அரசுப் பயணம் போயும் எந்த பிரோயோஜனமும் இல்ல.. கடும் அதிருப்தியில் முதல்வர் விஜய்..!!
கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், தமிழகத் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மீது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதி தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பது அவரது அமைச்சர் பதவிக்கே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் மூன்று முறை அங்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டும், அப்பகுதியின் முக்கியப் பொருளாதாரத் தூணாக விளங்கும் தொழில்துறைச் சங்கப் பிரதிநிதிகளை ஒருமுறை கூட நேரில் அழைத்து அவசரப் பிரச்சினைகள் குறித்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தங்களது கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுவதாகக் கூறி தொழில் அமைப்பினர் முதலமைச்சர் அலுவலகத்திற்குத் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
தொழில் முதலீடுகள் மற்றும் உள்ளூர் தொழில் மேம்பாட்டில் ஆளும் தவெக அரசு தீவிரம் காட்டி வரும் சூழலில், முக்கியப் பொறுப்பில் உள்ள அமைச்சரின் இந்த மெத்தனப் போக்கு கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தொழில்துறையினரின் கோபத்தைத் தணிக்கும் வகையிலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் அரசியல் கணக்குகளைக் கருத்தில் கொண்டும் அமைச்சர் கீர்த்தனாவின் பதவியைப் பறிக்க அல்லது இலாகாவை மாற்ற தவெக தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
