LATEST NEWS
“டேய் துரோகி காரை நிறுத்துடா இப்போ” கள்ளக்காதலியுடன் சென்ற கணவன்.. காரின் போனெட்டில் தொங்கியபடி துரத்திய மனைவி.. நடுரோட்டில் சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் கார் ஒன்றில் செல்வதைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி, காரின் முன்பக்க போனெட் மீது ஏறித் தடுத்தபோதும் கார் நிறுத்தப்படாமல் ஓட்டிச் செல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுரோட்டில் நடைபெற்ற இந்த பரபரப்பான குடும்ப நாடகம் மற்றும் ஆபத்தானப் பயணம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கார் ஓட்டிச் செல்வதைப் பார்த்த அந்தப் பெண், காரை நிறுத்தக் கோரி உடனடியாக அதன் போனெட் பகுதி மீது ஏறியுள்ளார். இருப்பினும், காரை நிறுத்தாத அவரது கணவர், வாகனத்தின் வேகத்தை அதிகரித்து தொடர்ந்து காரைச் செலுத்தியுள்ளார். இதனால், வேறு வழியின்றி அந்தப் பெண் காரின் போனெட்டைப் பிடித்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஆபத்தான முறையில் காரில் தொங்கியபடியே பயணித்துள்ளார்.
இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், உள்ளூர் காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
