LATEST NEWS
அதிமுகவுக்கு அடுத்தடுத்த ஷாக்..! விலகிய 1 மணி நேரத்தில்… தவெகவில் ஐக்கியமான முன்னாள் ADMK எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், ராஜவர்மன் ..!!
அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நிமிடங்களிலேயே, காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நா. முருகுமாறன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கடலூர் மாவட்ட அதிமுகவில் முக்கிய முகமாக விளங்கிய இவர், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவனை வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கழகத் தலைமை தனது உழைப்பை உதாசீனப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி அதிமுகவில் இருந்து விலகிய முருகுமாறனுடன், சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான எம். எஸ். ஆர். ராஜவர்மனும் தவெகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்சி அரசியல் சூழல்களுக்கு மத்தியில், அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய முகங்கள் தொடர்ந்து தவெகவை நோக்கித் தங்களை முன்னிறுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
