அடப்பாவி..! பெண் காணாமல் போன வழக்கில் திடுக்கிடும் திருப்பம்… பாதி எரிந்த உடலைச் சாக்கில் கட்டி.. நெஞ்சை உலுக்கிய கொடூரக் கொலைச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி..! பெண் காணாமல் போன வழக்கில் திடுக்கிடும் திருப்பம்… பாதி எரிந்த உடலைச் சாக்கில் கட்டி.. நெஞ்சை உலுக்கிய கொடூரக் கொலைச் சம்பவம்..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் குல்காச்சார்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லாப்பூர் கிராமத்தில், காணாமல் போன பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.செல்லாப்பூரைச் சேர்ந்த கந்தா அம்ருதம்மா (34) என்ற அந்தப் பெண், கடந்த செப்டம்பர் 18 அன்று தனது தாயார் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அம்ருதம்மாவுடன் பழகி வந்த மங்கலி ஆனந்த் (28) என்ற நபர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், வென்னச்சேட் ஷிவாருலு பகுதியில் உள்ள ஏரி அருகே வைத்து அம்ருதம்மாவை அவர் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொலையை மறைப்பதற்காக அம்ருதம்மாவின் உடலில் டீசல் ஊற்றி ஆனந்த் தீ வைத்துள்ளார்.

Advertisement

இருப்பினும், உடல் முழுமையாக எரியாததால் அதிர்ச்சியடைந்த குற்றவாளி, எஞ்சிய உடல் பாகங்களை ஒரு சாக்கில் மூட்டையாகக் கட்டி தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார். பின்னர், தெலுங்கானா – கர்நாடகா எல்லைப் பகுதியான ராய்ச்சூர் செல்லும் வழியில் உள்ள அடர்ந்த மரப்புதர்களுக்கு இடையே உடலை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். தற்போது எல்லைப் பகுதியில் அம்ருதம்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், குல்காச்சார்லா போலீசார் மங்கலி ஆனந்தைக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in