LATEST NEWS
VIDEO: “திரும்ப வந்துட்டேனு சொல்லு!” – சர்ச்சைகளைத் தாண்டி NVIDIA CEO-வாக மாஸ் என்ட்ரி கொடுத்த ஜென்சன் ஹுவாங்.. கொண்டாடித் தீர்த்த ஊழியர்கள்..!
என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்ட ஜென்சன் ஹுவாங்கிற்கு, அந்நிறுவன ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ள நிலையில், அவருக்கு எதிரான விசாரணை தொடரும் என இயக்குநர்கள் குழு தெரிவித்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவுகள் மற்றும் சீன உளவாளியுடனான தொடர்பு குறித்த சர்ச்சைகளால் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த ஜென்சன் ஹுவாங், சுமார் 11 நாட்களுக்குப் பிறகு மீண்டும் என்விடியா நிறுவனத்தின் CEO-வாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற கையோடு கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அவருக்கு, ஊழியர்கள் கைதட்டியும் கோஷங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவரது மறுபிரவேசத்தைத் தொடர்ந்து என்விடியா நிறுவனப் பங்குகள் சுமார் 31 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இதற்கிடையில், ஜென்சன் ஹுவாங் மீதான திருமணத்தை மீறிய உறவுகள் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் இலக்காக அவர் இருந்தாரா என்பது குறித்த சுயாதீனக் குழுவின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என என்விடியா இயக்குநர்கள் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணைக்கு ஜென்சன் ஹுவாங் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் அக்குழு விளக்கமளித்துள்ளது.
