“போனால் போகட்டும் போடா” த.வெ.க தலைமை மீது அதிருப்தி..? – நாஞ்சில் சம்பத் பதிவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போனால் போகட்டும் போடா” த.வெ.க தலைமை மீது அதிருப்தி..? – நாஞ்சில் சம்பத் பதிவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவித்துவமான பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “போனால் போகட்டும் போடா…” எனத் தொடங்கும் அந்தப் பதிவில், “இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை எவரும் இருட்டாக்கல் முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீரெனத் தத்துவார்த்த ரீதியாகவும் அதே நேரத்தில் ஆக்ரோஷமாகவும் அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு பல்வேறு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தவெக தலைமைக்கும் அவருக்கும் இடையே ஏதேனும் அதிருப்தி நிலவுகிறதா? அல்லது கட்சியில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக எழுந்த விவாதங்களின் வெளிப்பாடா என்ற கேள்வியுடன், இந்த எக்ஸ் பதிவின் பின்னணியிலுள்ள உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு அரசியல் தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in