LATEST NEWS
குழந்தைகள் அட்டையில் எதுக்கு இவரு போட்டோ..? சொந்தக் காசுல பண்ணலாமே.. த.வெ.க அரசை வெளுத்து வாங்கிய திண்டுக்கல் சீனிவாசன்..!!
தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் அட்டையில் எதற்காக இவரது புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் இதுபோன்ற விளம்பரங்களைச் செய்யலாமா என்றும், அதற்குப் பதிலாக அவர் தனது சொந்தப் பணத்தைப் போட்டு இதைச் செய்திருக்கலாமே என்றும் ஒரு தாய்மார் கேள்வி எழுப்புவதாக திண்டுக்கல் சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசின் இலவசப் பேருந்து திட்டத்தினால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்த விமர்சனங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
