அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. கதவைத் திறந்து பார்த்த அக்கம்பக்கத்தினருக்குக் காத்திருந்த பகீர் காட்சி.. 32 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. கதவைத் திறந்து பார்த்த அக்கம்பக்கத்தினருக்குக் காத்திருந்த பகீர் காட்சி.. 32 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பெரிய கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (32). திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் டைல்ஸ் வேலை செய்து வரும் சம்பத் (38) என்பவருடன் கஸ்தூரிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதைத் தொடர்ந்து, சம்பத் அடிக்கடி கஸ்தூரியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பத்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் கடந்த சில வாரங்களாக கஸ்தூரி அவருடன் பேசுவதைத் தவிர்த்து, பழக்கத்தையும் முழுமையாக நிறுத்தியுள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த சம்பத், நவம்பர் 12 அதிகாலை நேரத்தில் கஸ்தூரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு கஸ்தூரியிடம் தகராறில் ஈடுபட்ட சம்பத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மார்புப் பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

Advertisement

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த கஸ்தூரி வலியால் அலறியபடி மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த கஸ்தூரியை மீட்டு உடனடியாகச் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீசார், தலைமறைவாக இருந்த சம்பத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in