LATEST NEWS
“ரிசார்ட்டில் கோடி கோடியாக பணம்”.. உறுதியாகி நம்பிக்கையில்லா தீர்மானம்..? திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு..!!
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ள கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மாற்றுக் கட்சிக்குச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில்தான், அவர்களை ரிசார்ட்டில் தங்க வைத்து கோடி கோடியாகப் பணம் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வளவு செய்தபோதிலும், அவர்களில் சிலர் மாற்றுக் கட்சிக்குச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் யார் என்பது சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்போது வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது உறுதியாகிறதா என்ற கேள்வியை அரசியல் களத்தில் எழுப்பியுள்ளது.
