LATEST NEWS
“இவர் தான சரியான ஆளு” விஜய்யின் அடுத்த குறி கரூர்..? செந்தில் பாலாஜியைச் சமாளிக்கத் தயாராகும் தவெகவின் பலமான முகம்.. அனல் பறக்கும் இடைத்தேர்தல்..!!
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை டிசம்பர் 20-க்குள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுகவைக் காட்டிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இத்தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கரூர் தொகுதியில் திமுகவின் பலத்தை எதிர்கொள்ளும் வகையில், அத்தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்படவுள்ளார். கரூர் பகுதியில் செந்தில் பாலாஜிக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கும் பலமான கட்டமைப்பும் உள்ளதால், திமுக இத்தொகுதியைத் கைப்பற்ற தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது.
மறுபுறம், தவெக தரப்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் கோட்டையாகக் கருதப்படும் கரூரில், அவருக்குக் கடும் போட்டியைக் கொடுத்து சமாளிக்கக் கூடிய பலமான முகமாக இவர் பார்க்கப்படுகிறார்.
செந்தில் பாலாஜியின் அரசியல் தாக்கம் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் போன்ற சவால்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பண பலம் மற்றும் சொந்த செல்வாக்கு கொண்ட விஜயபாஸ்கரின் வியூகங்களால் கரூர் இடைத்தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பையும் அனல் பறக்கும் போட்டியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
